ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த கர்ணன் பட இயக்குநர் மாரி செல்வராஜ் நான் அடங்காத் தமிழன் விஜய் ரசிகர் மன்றத் தலைவர் எனத் தெரிவித்துள்ளார்.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	சில ஆண்டுகளுக்கு முன் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ்.
 
									
										
			        							
								
																	இப்படத்தை பா.ரஞ்சித் தயாரித்தார். இப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகளுக்கும் பெரும் பாராட்டுகள் கிடைத்தது.
 
									
											
									
			        							
								
																	இந்நிலையில் இவர் தற்போது தனுஷ் நடிப்பில் கர்ணன் படத்தை இயக்கியுள்ளார். எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படம் வரும்  2021  ஏப்ரல் மாதம் திரைக்குவரவுள்ளது.
 
									
					
			        							
								
																	இந்நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாரி செல்வராஜ் நிகழ்ச்சித் தொகுப்பாளரிடம் மனம்விட்டுப் பேசினார். அப்போது அவர், நான் எங்க ஊர்லஅடங்கா தமிழன் விஜய் ரசிகர் மன்றம் தலைவன்னான் !
 
									
			                     
							
							
			        							
								
																	பாத்தா #விஜய் படம் மட்டும்தான் பாப்பேன் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை தற்போது விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
 
									
			                     
							
							
			        							
								
																	மாரி செல்வராஜ் யாருடைய ரசிகர்கள் என்று இத்தனை நாட்களாக அனைவரும் கேட்டு வந்த நிலையில் தற்போது, அவரே இதைப் போட்டுவுடைத்து நான் விஜய் ரசிகர்கள் என்று கூறியுள்ளது., விஜய் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அடுத்த படம் விஜயுடனா எனக் கேள்வி எழுப்பிவருகின்றனர்.