Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டீலில் விட்ட கார்த்தி! விஷாலை ஓகே பண்ணிய அடங்கமறு இயக்குனர்!

டீலில் விட்ட கார்த்தி! விஷாலை ஓகே பண்ணிய அடங்கமறு இயக்குனர்!
, சனி, 25 ஏப்ரல் 2020 (15:26 IST)
அடங்கமறு படத்தின் மூலம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிக்க இருக்கிறார்.

நடிகர் விஷால் இப்போது சக்ரா மற்றும் துப்பறிவாளன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக இரு படங்களின் படப்பிடிப்புப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இருமுகன், நோட்டா ஆகிய படங்களின் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை தனுஷின் முனனாள் மேனேஜர் வினோத்குமார் தயாரிக்கிறார்.

இந்நிலையில் அடங்கமறு படத்தின் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் புதிய படத்தில் நடிக்க விஷால் ஒப்பந்தமாகியுள்ளார். முதலில் கார்த்திக் தங்கவேலிடம் கதை கேட்ட நடிகர் கார்த்தி அதில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க அவர் அதிக நாட்களை ஒதுக்கியுள்ளதால் இப்போது அந்த படத்தை தொடங்கமுடியவில்லை. இதனால் விஷாலிடம் கதை சொல்லி ஓகே வாங்கியுள்ளா அடங்கமறு இயக்குனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டில் இருந்து வேலை செய்கிறீர்களா? ரஹ்மான் சொல்லும் ஆறு டிப்ஸ் இதோ!