Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“நாங்கள் புகாரளித்த போது நடிகர் சங்கமோ விஜயகாந்தோ உதவவில்லை”… விசித்ரா கணவர் குற்றச்சாட்டு!

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2023 (10:00 IST)
தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் கவர்ச்சி நடிகையாக நடித்து பிரபலம் ஆனவர் விசித்ரா. ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகிய அவர் இப்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீண்டும் புகழ் வெளிச்சத்துக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு சினிமா உலகில் நடந்த பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார். அதில் “நான் 20 வருடங்களுக்கு முன்னர் நடித்த ஒரு தெலுங்கு படத்தில், அந்த படத்தின் ஹீரோ என்னை அவரின் ரூமுக்கு அழைத்தார். ஆனால் நான் செல்லவில்லை. இதுபற்றி பேசும்போது அடுத்த நாள் அந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் என்னைக் கண்ணத்தில் அறைந்துவிட்டார். அதனால்தான் நான் சினிமாவை விட்டு விலகினேன்” எனக் கூறியிருந்தார்.

இது சம்மந்தமான வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் தெலுங்கு ரசிகர்கள் ‘விசித்ரா குறிப்பிடும் அந்த நடிகர் தெலுங்கு முன்னணி நடிகரான பாலகிருஷ்ணாதான் என்றும் அந்த ஸ்டண்ட் மாஸ்டர் விஜய்தான் என்றும் கருத்து தெரிவித்து விவாதித்து வருகின்றனர். 2001 ஆம் ஆண்டு பலேவிடி பசு படத்தில் பாலய்யாவோடு விசித்ரா இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் பரபரப்பாக இப்போது பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் விசித்ராவின் கணவர் அளித்த ஒரு நேர்காணல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் இந்த சம்பவம் நடந்த போது விசித்ரா நடிகர் சங்கத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் அப்போதைய தலைவர் விஜயகாந்த் இது சம்மந்தமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

2018 பட இயக்குனர் ஜூட் ஆண்டனி இயக்கத்தில் நடிக்கும் ஆர்யா!

மீண்டும் இணையும் தனுஷ் & அனிருத் கூட்டணி… எந்த படத்தில் தெரியுமா?

துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறாரா ஷங்கர்?

சில பேர் என்னை அடிக்கிறார்கள்.. ஆனால் - டிராகன் நிகழ்வில் பிரதீப் ரங்கநாதன் பேச்சு!

அழகிய உடையில் கேட்வாக் போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

அடுத்த கட்டுரையில்