Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாலியல் துன்புறுத்தல்: முதல்வரை சந்தித்து மனு அளித்தார் நடிகை வரலட்சுமி!

பாலியல் துன்புறுத்தல்: முதல்வரை சந்தித்து மனு அளித்தார் நடிகை வரலட்சுமி!

Advertiesment
நடிகை
, திங்கள், 12 ஜூன் 2017 (11:05 IST)
பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார் முதல்வர் எடப்பாடி பழனிச்சமியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.


 
 
கடந்த மார்ச் மாதம் சென்னையில் saveshakti என்ற ஹேஷ்டேக்குடன் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தையும் தனது பிரசாரத்தையும் தொடங்கினார் நடிகை வரலட்சுமி. இந்த கையெழுத்து இயக்கத்தில் பல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர்.
 
இதனை ஆரம்பிக்கும் போது மாநில அரசுக்கு ஒரு மனுவாக இந்த கையெழுத்து இயக்கத்தின் கோரிக்கையை கொடுக்க உள்ளதாக வரலட்சுமி கூறியிருந்தார். அதன் படி இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து தனது கோரிக்கை மனுவை வழங்கினார் நடிகை வரலட்சுமி.
 
முதல்வரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வரலட்சுமி, ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களுக்காக மகிளா நீதிமன்றங்கள் அதிகரிக்க வேண்டும். மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் அதிகம் பாதிக்கப்படும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் அதுதொடர்பான வழக்குகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்ததாக கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்ரீதேவியின் விழாவில் கலந்து கொள்வார்களா கமலும், ரஜினியும்?