Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 14 April 2025
webdunia

ஸ்ருதிஹாசன் போல தமிழ் சினிமாவை காலி செய்யும் வாரிசு நடிகர்!

Advertiesment
வரலட்சுமி
, திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (15:41 IST)
நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. வாரிசு நடிகையாக இருந்தாலும் முதலில் அவர் மேல் எந்த கவனமும் விழவில்லை. கடைசியில் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கான வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. தொடர்ந்து சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2 ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த அவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஆக்‌ஷன் படங்களில் அதிகமாக நடித்து வந்தார். ஆனால் அந்த படங்கள் எதுவும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் தெலுங்கில் அவர் நடித்த படங்கள் எல்லாம் பெரிய அளவில் கவனத்தைப் பெற்றது. இதனால் அங்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்த காரணத்தால் வரலட்சுமி படங்களில் நடிப்பதற்காக ஐதராபாத்திலேயே செட்டில் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லிங்குசாமி படத்தில் இணைந்த சூர்யா பட வில்லன்!