தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகராக சாக்லேட் பாயாக வலம் வந்தவர் பிரசாந்த். ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் அவர் தன்னுடைய மார்க்கெட்டை இழந்தார். அதனால் அவர் படங்களில் நடிப்பதில் பெரியளவு இடைவெளி விழுந்து மார்க்கெட்டை இழந்தார். இதையடுத்து பல ஆண்டுகள் கழித்து அவர் நடித்த அந்தகன் திரைப்படம் வெற்றி பெற்றது.
இதையடுத்து பிரசாந்த் இனிமேல் தொடர்ச்சியாக படங்களில் நடிப்பேன் எனக் கூறியிருந்தார். அந்த வகையில் தற்போது அவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் பிரசாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இவர்கள் இருவரும் இணைந்து 23 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் என்ற படத்தில் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரசாந்துடன் இணைந்து வின்னர் படத்தில் நடித்த கிரண் அவரின் நற்பண்புகள் குறித்துப் பேசியுள்ளார். அதில் “நான் என்னோடு நடித்த நடிகர்களில் பிரசாந்துடன் மட்டும்தான் தொடர்பில் உள்ளேன். அவர் நட்பு வட்டத்துக்குள் ஒருமுறை சென்றுவிட்டால், அவர் நம் மேல் அன்பொடு இருப்பார். நாம் பேசாவிட்டாலும் அவரே அழைத்துப் பேசுவார்.” எனக் கூறியுள்ளார்.