Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐந்தே மாதங்களில் காங்கிரஸில் இருந்து விலகிய கமல் பட நடிகை!

Webdunia
செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (19:31 IST)
காங்கிரஸ் கட்சியில் கடந்த மார்ச் மாதம் இணைந்த பிரபல நடிகை ஊர்மிளா, இன்று அக்கட்சியிலிருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார் 
 
 
நடிகை ஊர்மிளா கடந்த மார்ச் மாதம் அப்போதைய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இதனால் அவருக்கு மும்பை வடக்குத் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு கொடுத்தது. ஆனால் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் கோபால் ஷெட்டி என்பவரிடம் நடிகை ஊர்மிளா சுமார் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து காங்கிரஸ் கட்சியின் பெயரை கெடுத்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஊர்மிளா தரப்பிலிருந்து காங்கிரஸ் கட்சியினர் தனது வெற்றிக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது 
 
 
இந்த நிலையில் இன்று காங்கிரசில் இருந்து விலகுவதாக ஊர்மிளா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மும்பை காங்கிரஸ் கட்சியில் நிலவும் உட்கட்சி அரசியலை எதிர்த்து போராட தான் விரும்பவில்லை என்றும், அதனால் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஒரு தேர்தலிலும் போட்டியிட்டு, 5 மாதங்களில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
 
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை ஊர்மிளா வேறு கட்சியில் சேர்வாரா? அல்லது அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நடிகை ஊர்மிளா, கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய ‘இந்தியன்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷங்கர் படத்துடன் மோதும் ‘குட் பேட் அக்லி’.. ‘விடாமுயற்சி’ ரிலீஸ் எப்போது?

பிக்பாஸ் வீட்டிற்கு வரும் எலிமினேஷன் ஆன போட்டியாளர்.. திடீர் ட்விஸ்ட்..!

ஒரு வாரத்திற்கு விமர்சனங்கள் வராமல் தடுக்க வேண்டும்: இயக்குனர் வசந்தபாலன்..!

கும்பகர்ணன் ஒரு தொழில்நுட்ப வல்லுனர் .. இயந்திரங்களை உருவாக்குவார்- உ.பி. கவர்னர்

மாடர்ன் உடை ட்ரஸ்ஸில் ஸ்ரேயாவின் அட்டகாச ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments