உண்மை காதல் இன்னும் இருக்கு... மனம் திறந்த திரிஷா!

வியாழன், 14 மே 2020 (08:53 IST)
தமிழ் சினிமாவில் முதன்முறையாக 21 ஆண்டுகள் கடந்த பின்னும் உச்ச அந்தஸ்த்தில் வலம் வரும் ஒரே நடிகை த்ரிஷா மட்டும் தான். பல படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடிய த்ரிஷா தற்போது நயன்தாரா ஸ்டைலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். எவர்க்ரீன் நடிகையாக வலம் வரும் திரிஷா 37 வயதிலும் பலரது கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் கொரோனா உரடங்கில் வீட்டில் இருந்தபடியே தனது பிறந்தநாளை மிகவும் சிம்பிளாக கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள், நணபரக்ள் , பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறினார். இந்நிலையில் தற்போது தன் ரசிகர்ளுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக கலந்துரையாடிய த்ரிஷாவின் ரசிகர் ஒருவர், "  வாழ்க்கையின் காதலை சந்தித்து விட்டீர்களா ? என கேள்வி கேட்டார்.

அதர்கு பதிலளித்த த்ரிஷா, " இப்போது அப்படி ஒன்றை நான் சந்திக்கவில்லை என கூறினார். பின்னர் காதல் பற்றி கேட்டதற்கு ''காதல் ஒரு பட்டாம்பூச்சி போன்ற உணர்வை கொடுக்கும். உண்மை காதல் இன்னமும் இருக்கிறது. அது இல்லாமல் வாழவே முடியாது. என காதல் குறித்த கேள்விகளுக்கு நச்சுனு பதில்கள் கூறினார். த்ரிஷாவின் முன்னாள் காதல் நடிகர் ரானா தற்போது மற்றொரு பெண்ணை காதலிப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பாடகி கனிகா கபூரின் பிளாஸ்மா தானத்தை ஏற்க மறுத்த மருத்துவர்கள்! பின்னணி என்ன?