Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சினிமா கதை உண்மையில் நடக்கிறது! – குஜராத் சம்பவம் குறித்து டாப்ஸி கண்டனம்!

Advertiesment
Cinema
, செவ்வாய், 14 ஜூலை 2020 (10:43 IST)
குஜராத்தில் அமைச்சர் மகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் போலீஸ வேலையை ராஜினாமா செய்துள்ள நிலையில் இது குறித்து நடிகை டாப்ஸி கண்டனம் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் ஊரடங்கு விதிகளை மீறி சுற்றியதாக அமைச்சர் மகனுடன் பெண் போலீஸ் அதிகாரி வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமைச்சர் மகனை எதிர்த்து பேசிய அந்த பெண் போலீஸ் தலைமையகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள நடிகை டாப்ஸி “கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகளை நிறுத்தியுள்ளோம். அதை ஈடுகட்டும் விதமாக நிஜத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன” என தெரிவித்துள்ளார். தொடர்ந்து சமூக செயல்பாடுகள் மட்டுமல்லாது சிபிஎஸ்சி பாடங்களை நீக்கிய அரசின் செயல்பாடுகள் போன்றவை குறித்தும் நடிகை டாப்ஸி கருத்துகளை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொல்லாத உலகில் பயங்கர கேம் நடிகை சான் ரியா கலக்கல் போட்டோஸ்..!