Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தயாரிப்பாளராகும் தமன்னா!!

தயாரிப்பாளராகும் தமன்னா!!
, வெள்ளி, 7 அக்டோபர் 2016 (17:24 IST)
நடிகை தமன்னா பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்.

 
பிரபுதேவாவுடன் இணைந்து தமன்னா நடித்துள்ள ‘தேவி’ படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகி உள்ளது. 
 
அதோடு, பிரபுதேவாவுடன் தமன்னா நெருக்கமாக இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. 
 
இந்த நிலையில் தமன்னா பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக செய்திகள் தெரியவந்துள்ளன. பிரபுதேவாவுடன் சேர்ந்து இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
 
தற்போது தமன்னா நடிக்கும் ‘பாகுபலி -2’ அடுத்த வருடம் திரைக்கு வருகிறது. அதன்பிறகு படத்தயாரிப்பு நிறுவனம் பற்றிய அறிவிப்பு வரலாம் என்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஷ்மோரா - கலக்கல் டிரெய்லர் வீடியோ