தமிழ் சினிமாவில் பல பரிமாணங்களை கண்டு வருகிறார் நடிகர் தனுஷ். நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என இருந்த தனுஷ் இயக்குனர் அவதாரமும் எடுத்துவிட்டார். நடிகர் ராஜ்கிரணை வைத்து தனுஷ் எடுத்த பவர் பாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பல தரப்பிலிருந்தும் இயக்குனர் தனுஷுக்கு பவர் பாண்டி படத்துக்காக பாராட்டுகள் வருகின்றன. பலரையும் உருக வைத்த இந்த படத்தை பார்த்த நடிகை சுஜா வருணி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை சுஜா வருணி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுத வீடியோவை வெளியிட்டு அதனை பவர் பாண்டி படத்தில் நடித்த ரேவதி மற்றும் தனுஷுக்கு சமர்ப்பிப்பதாக கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.