Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் பயோபிக் என்றதும் பலரும் என்னை மிரட்டினார்கள் – நடிகை சோனா பகிர்ந்த தகவல்!

vinoth
சனி, 8 மார்ச் 2025 (08:35 IST)
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் சோனா.  90 களில் நிறைய படங்களில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து பிரபலமானார். அதன் பின்னர் சில படங்களில் கவர்ச்சி நடிகை வேடத்தில் நடித்தார். இடையில் பிரபல பாடகர் எஸ் பி பி சரண் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக போலீஸில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அந்த சர்ச்சைகளால் சில ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இருந்தே காணாமல் போன அவர், ‘ஷார்ட்பிளிக்ஸ்’ ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ள ‘ஸ்மோக்’ என்கிற வெப்சீரிஸ் மூலமாக இயக்குனராக கம்பேக் கொடுக்கவுள்ளார். இந்த தொடர் அவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த தொடர் குறித்து பேசியுள்ள அவர் “என்னுடைய பயோபிக் என்று சொன்னதும் நிறைய எதிரிகள் முளைக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒருவர், இருவர் கிடையாது, பல பேர். 2010 முதல் 2015 வரை என் வாழ்க்கையில் நடந்ததை வைத்து இந்த தொடரை இயக்கியுள்ளேன். இரண்டாம் பாகமும் வரும். கவர்ச்சி நடிகை சோனா என்ற பெயரை மாற்றி இயக்குனர் சோனா என்ற பெயரைப் பெறவே இந்த தொடரை இயக்கியுள்ளேன்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் பயோபிக் என்றதும் பலரும் என்னை மிரட்டினார்கள் – நடிகை சோனா பகிர்ந்த தகவல்!

தமிழ் இசை உலகுக்கு ஒரு பொன்னான நாள்… லண்டனில் இன்று சிம்ஃபொனியை அரங்கேற்றும் இசைஞானி இளையராஜா!

சிவப்பு நிற உடையில் ஜொலிக்கும் ஸ்ருதிஹாசன்… ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்