பிரபல நடிகையின் மகன் தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்!

சனி, 23 மே 2020 (12:48 IST)
பழம்பெரும் நடிகையான வாணிஸ்ரீயின் மகன் வெங்கடேஷ் கார்த்திக் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக வெளியான செய்தியால் திரையுலகினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சிவாஜி மற்றும் எம் ஜி ஆர் ஆகியவர்களுக்கு ஜோடியாக நடித்து 70 மற்றும் 80 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் வாணிஸ்ரீ. பின்னர் திருமணம் செய்துகொண்டு குடும்பத்தோடு சினிமாவை விட்டு விலகினார். அவருக்கு வெங்கடேஷ் கார்த்திக் என்ற மகன் உள்ளார். இவர் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனை கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள கிராமத்தில் அவருடைய சொந்த வீடு ஒன்றில் மாட்டிக்கொண்டுள்ளார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் சென்னையில் வசித்து வந்துள்ளனர். இந்த நாட்களில் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் இன்று காலை தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின.

இது சம்மந்தமான புகைப்படமும் இணையத்தில் பரவ திரையுலகினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தற்கொலைக்கான முழுமையான காரணம் என்னவென்று தெரியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கிராமத்துக்கு போய் ரொம்ப கருப்பா ஆகிட்டீங்க... போட்டோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!