Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேண்ட் எங்க மேடம்...? சிம்ரன் வெளியிட்ட புகைப்படத்தில் பேண்டை தேடும் நெட்டிசன்ஸ்!

Advertiesment
பேண்ட் எங்க மேடம்...? சிம்ரன் வெளியிட்ட புகைப்படத்தில் பேண்டை தேடும் நெட்டிசன்ஸ்!
, புதன், 4 டிசம்பர் 2019 (11:46 IST)
தமிழ் சினிமாவிற்கு வரப்பிரசாதமாக கிடைத்த நடிகைளில் முக்கியமான சிம்ரன். 90ஸ் கால கட்டத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களயும் தனது இடுப்பசைவில் வசியம் செய்த இவர் கமல் , அஜித் , சூர்யா , என பல்வேறு உச்ச நடிகர்களுக்கே டஃப் கொடுத்து நடித்தவர். அன்றைய கால கட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வந்த சிம்ரனுக்கு சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த வில்லி கதாபாத்திரம் ஏராளாமான விருதுகள் கிடைத்துள்ளது. 
 
பின்னர் கடந்த 2003 ஆம் ஆண்டு சதீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். பின்னர் இவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது..குடும்பம், வாழ்க்கை, குழந்தை என நிறைய பொறுப்புகள் வந்துவிட்டதால் சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் ஒதுங்கிவிட்டார். பின்னர் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தில் முதன் முறையாக அவருக்கு ஜோடியாக நடித்து இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கினார். 
 
webdunia
இந்நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் சிம்ரன் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். அந்தவகையில் கடந்த சில மாதங்களுக்கு தனது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட புகைப்படமொன்று ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தில் குட்டியான ஷார்ட்ஸ் அணிந்துகொண்டு போஸ் கொடுத்துள்ளார். அதை கண்ட நெட்டிசன்ஸ் ஆமா...உங்க பேண்ட் எங்க மேடம் காணோம் என கேட்டு கிண்டலடித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இருந்தாலும் இம்புட்டு கவர்ச்சி வேண்டாமே....ஹாட்டான உடையில் ஹாயாக போஸ் கொடுத்த கியார அத்வானி!