Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமான நடிகை ஸ்ருதிஹாசன்…!

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (15:42 IST)
நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் விஜய் சேதுபதியோடு அவர் நடித்த லாபம் திரைப்படம் வெளியானது.

தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ருதிஹாசனை தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகை ஆக்கியது. தெலுங்கில் அறிமுகம் ஆனதில் இருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடிக்கிறார்.

அதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா நடிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை கோபிசந்த் மாலினேனி இயக்குகிறார். ஏற்கனவே சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது ஹாலிவுட் படமான ’தி ஐ’ என்ற ஹாலிவுட் சைக்காலஜி திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் மார்க் ரோலி முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

டிரைலர் அடிச்ச ஹிட்டு… பெரும் தொகைக்கு முன்னணி ஓடிடியால் வாங்கப்பட்ட கேங்கர்ஸ்!

ஹிட் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஹிப்ஹாப் ஆதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments