Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை ஸ்ரேயா கணவருக்கு கொரோனா அறிகுறி ? - அதிர்ந்த திரையுலகம்!

Advertiesment
நடிகை ஸ்ரேயா கணவருக்கு கொரோனா அறிகுறி ? - அதிர்ந்த திரையுலகம்!
, புதன், 15 ஏப்ரல் 2020 (10:10 IST)
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். ‘மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் ‘போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துகொண்டே வந்தது.

இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.     தற்போது இவர்கள் இருவரும் ஸ்பெயின் நாட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கணவர் அன்ரீவ்விற்கு அதிகமான காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இது கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதித்து பார்க்கலையில் கொரோனா இல்லை என்பது உறுதியானது.

webdunia

இருந்தாலும் இந்த நேரத்தில் மருத்துவமனையில் இருப்பது பாதுகாப்பற்றது என கருதி இருவரும் வீட்டிலேயே ஒருவரை ஒருவர் தனிமைப்படுத்திக்கொண்டனர். சமீபத்தில் தான் இந்த அழகிய ஜோடியின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலானது, பாத்திரம் கழுவிய கணவருக்கு முத்தம் கொடுத்த ஸ்ரேயாவின் அந்த வீடியோ நிறைய கண்ணு பட்டுவிட்டதால் இப்படி ஆகிவிட்டதோ என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’தூய்மைப் பணியாளர்களுக்கு’’ நிதி உதவி செய்த நடிகர் ராகவா லாரன்ஸ்