Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 14 April 2025
webdunia

மக்கள் அவதிப்படும் போது செய்யுற வேலையா இது? ஷிவானியை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!

Advertiesment
ஷிவானி நாராயணன்
, வியாழன், 7 டிசம்பர் 2023 (14:21 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக தன்னுடைய டீனேஜ் வயதிலேயே அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில சீரியல்களில். சீரியலில் ஹோம்லியாக நடித்தலௌம் இன்ஸ்டாகிராமில் டான்ஸ் , கவர்ச்சி புகைப்படம் என தொடர்ந்து பதிவிட்டு  பிரபலமானார்.

இன்ஸ்டாகிராமில் அவரின் பக்கத்தில் இளசுகள் கூடி கும்மியடிக்க, வைரல் போட்டியாளர்களை தேடிக் கொண்டிருந்த பிக்பாஸ் அவரை அலேக்காக தூக்கிச் சென்றார். அங்கு பல நாட்கள் இருந்த ஷிவானி வெளியே வந்ததும் ஹீரோயினாக வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்திருப்பார். ஆனால் நடந்ததோ சோகம்.

இந்நிலையில் இப்போது இன்ஸ்டாகிராமில் போட்டோ மற்றும் வீடியோக்களாக பகிர்ந்து வரும் அவர், தற்போது மழையில் அரைகுறை ஆடையோடு நனைந்தபடி ஜாலியாக ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட, ரசிகர்கள் பலரும் கமெண்ட் செக்‌ஷனில் அவரை கழுவி ஊற்ற ஆரம்பித்துள்ளனர். மக்கள் புயலால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் நேரத்தில் மழையை ரசிப்பது போன்ற இந்த வீடியோ ரொம்ப அவசியமா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புஷ்பா பட நடிகரை கைது செய்த போலீஸார்… துணை நடிகை தற்கொலை விவகாரத்தில் பரபரப்பு!