கையில் துப்பாக்கியோடு மிரட்டும் லுக்கில் சமந்தா… புதிய படத்தின் மோஷன் போஸ்டர்!

vinoth
திங்கள், 29 ஏப்ரல் 2024 (07:48 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இது தவிர அவர் கைவசம் வேறு படங்கள் எதுவும் இல்லை.

அதற்குக் காரணம் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக அவர் உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு அதனால் படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் இப்போது அவர் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

சமந்தாவே தன்னுடைய டிராலாலா மூவிஸ் மூலம் தயாரிக்கும் ‘மா இண்டி பங்காரம்’ என்ற இந்த படத்தின் இயக்குனர் யார் என்பது போஸ்டரில் அறிவிக்கப்படவில்லை. மோஷன் போஸ்டரில் குக்கர் ஒன்று வெடிக்க அதன் பின்னர் கையில் ரத்தக் காயத்தோடு சமந்தா துப்பாக்கியோடு ஆவேசமாக நிற்கும் ஸ்டில் இடம்பெற்றுள்ளது. இதைப் பார்க்கும் போது ஆக்‌ஷன் கதையாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments