Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை சமந்தா-வுக்கு விரைவில் டும்...டும்..டும்...!

நடிகை சமந்தா-வுக்கு விரைவில் டும்...டும்..டும்...!

Advertiesment
நடிகை சமந்தா
, வியாழன், 26 மே 2016 (10:39 IST)
இளசுகளின் மனம் கவர்ந்த நடிகை சந்தாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாம்.
 

 
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் இளசுகளின் மனம் கவர்ந்த நடிகை சமந்தா. சமந்தா பொண்ணை காதலில் விழவைத்து வெற்றி பெறுவது யார் என தமிழ் மற்றும் தெலுங்குபட உலகில் பெரும் போட்டி ஏற்பட்டது.
 
ஏற்கனவே, நடிகர் சித்தார்த்துடன் நடிகை சமந்தாவுக்கு காதல் என கிசுகிசு கிளம்பியது. மேலும், இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், பின்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாகவும் தகவல் வெளியானது.
 
இந்த நிலையில், இளம் கதாநாயகன் அழகில் நடிகை சமந்தா  மயங்கி, அவரையே கரம்பிடிக்க முடிவு செய்துவிட்டாராம். அந்த அதிர்ஷ்டகார நபர் யார் என தமிழ் மற்றும் தெலுங்கு உலகில் பெரும் ஆர்வம் ஏற்பட்டது.
 
இதை கண்டுபிடிக்க ஒரு பட்டாளமே களத்தில் இறங்கியது. முடிவு, அது நடிகர் நாகசைதன்யா என தெரிய வந்துள்ளது. இவர், பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் என்பது கூடுதல் தகவல்.
 
தமிழில் பட்டையைக் கிளம்பிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை கவுதம் மேனன் தெலுங்கில் எடுத்தபோது நடிகர் நாகசைதன்யாவுக்கும் நடிகை சமந்தாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆக, நடிகை சமந்தா பொண்ணுக்கு விரைவில் டும்...டும்...!

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பைலட்-டை கரம் பிடிக்கும் பிரபல தமிழ் நடிகை