Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சினிமா தோல்விகளை மறக்க வெக்கேஷனுக்கு சென்ற சமந்தா!

சினிமா தோல்விகளை மறக்க வெக்கேஷனுக்கு சென்ற சமந்தா!
, வெள்ளி, 12 மே 2023 (16:02 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் குணசேகர். இவர் பல ஹிட் படங்களை இயக்கியுள்ள நிலையில் காளிதாசர் எழுதிய புராணத்தில் உள்ள ஷகுந்தலம் எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு புராணத் திரைப்படத்தை சகுந்தலம் எனும் பெயரில் உருவாக்கினார். அந்த படத்தில் ஷகுந்தலை கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் தேவ் மோகன் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். படம் நீண்ட தாமதத்துக்குப் பிறகு ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மோசமான வசூலையே பெற்றுள்ளது. இதற்கு முன்னர் வெளியான சமந்தாவின் யசோதா திரைப்படமும் வெற்றியைப் பெறவில்லை.

ஆனாலும் சமூக வலைதளங்களில் சமந்தாவுக்கு இன்னமும் கிரேஸ் குறையவில்லை. அவர் வெளியிடும் புகைப்படங்கள் லட்சக்கணக்கில் லைக்ஸ்களை குவித்து வருகின்றன. அந்த வகையில் இப்போது அவர் வெக்கேஷனுக்கு சென்று அது சம்மந்தமான புகைப்படங்களை பகிர, அவை இணையத்தில் வைரல் ஆகியுள்ளன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"அவன் இவன்" படத்தில் முதலில் நடிக்க இருந்த அண்ணன் - தம்பி நடிகர்கள் இவங்க தான்!