Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ரம்பாவுக்கு நீதிமன்றம் கண்டனம்!

Webdunia
சனி, 21 ஜனவரி 2017 (16:56 IST)
நடிகை ரம்பாவுக்கும் பிரபல தொழிலபர் இந்திரகுமார் என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு  இரு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், கணவருடன் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ரம்பா சென்னைக்கு வந்து விட்டார்.

 
 
இதையடுத்து சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடிகை ரம்பா 'தன் கணவரை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும்'  ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், என்று கூறியிருந்தார். தற்போது சினிமாவில் நடிக்காததால் தனக்கு வருமானம்  இல்லாததால் மாதந்தோறும் ரூ 2.50 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும்' என்றும் கூறியிருந்தார்.
 
இந்த வழக்கு கடந்த டிசம்பர் 3-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, ரம்பா மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். அதில்,  என்னுடைய கணவர் என்னுடன் சேர்ந்து வாழவில்லை. குழந்தைகள் இருவரும் என்னுடைய கட்டுப் பாட்டின் கீழ்தான்  உள்ளனர். அவர்கள் சென்னையில் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கின்றனர். எனவே, இந்த இரு குழந்தைகளின் சட்டப்படியான  பாதுகாவலராக என்னை (ரம்பாவை) அறிவிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். 
 
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி பூங்குழலி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரம்பாவும், அவரது கணவரும்  நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர்கள் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும் என்று  கோரிக்கை வைத்தனர். இதற்கு நீதிபதி, 'கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கேட்டு வழக்கு தொடர்ந்து விட்டு ரம்பா  விசாரணைக்கு வராமல் இருந்தால் என்ன அர்த்தம்? என்று கோபத்துடன் கூறிவிட்டு, பின்னர் வழக்கு விசாரணையை பிப்ரவரி  4-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதெல்லாம் நடக்குற காரியமாங்க..! ஏ.வி.எம் நிறுவனத்திற்கு எம்.ஜி.ஆர் விட்ட சவால்..!

சினிமால அந்த விஷயத்துல தொடர்ந்து தோத்துட்டேன்.! ஓப்பனாக ஒத்துக்கொண்ட இயக்குனர் சுந்தர் சி..!

சமந்தாவின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மாளவிகா மோகனனின் கிளாமர் ட்ரஸ் போட்டோஷூட்!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் ‘அஞ்சாமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments