நடிகை பூர்ணா தகராறு படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் பரிச்சியப்பட்ட ஒரு நடிகையானார்.
இப்போது பூர்ணாவுக்கு திருமணம் செய்துவைக்க அவர் குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். நடிகை பூர்ணாவும் திருமணத்திற்கு மிகுந்த சந்தோசத்தோடு தயாரானார், ஆனால் தற்போது அந்த திருமணம் சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த திருமணத்தில் மணமகன் வீட்டாருக்கும் இவர்களுக்கும் இடையில் ஜாதி பிரச்சனை உருவெடுத்துள்ளதாம். அதனால் திருமணம் கூடி வரவில்லை. மேலும் படங்களில் நடிப்பது மற்றும் நடனமாடுவது இதெல்லாம் நிறுத்திக்கொள்ளவேண்டும் என பல கண்டிஷன்கள் போட்டுள்ளனர்.
இதனால் மிகுந்த மன உளைச்சளுக்கு ஆளானார் நடிகை பூர்ணா. தற்போது இந்த திருமணம் தள்ளிவைக்கப்படுகிறது.