Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்பாஹ் விஜய் கூட இப்படி ஆடியிருக்கமாட்டாரு - வாத்தி பாடலுக்கு பிரகதி ஆடிய குத்து டான்ஸ்!

Webdunia
செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (09:09 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் "மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மாணவராக சாந்தனு பாக்யராஜும் , வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

மேலும் ஆன்ட்ரியா, 96 புகழ் கௌரி கிஷன் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் முதல் மூன்று போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்துமே வேற லெவல் ஹிட் அடித்துவிட்டது. இந்த பாடல்களை தியேட்டரில் பார்ப்பதற்காகவே படையெடுக்கும் கூட்டம் ஏராளம் உண்டு.

இந்நிலையில் தற்போது "வாத்தி கம்மிங்" பாடலுக்கு நிறைய பேர் நடனமாடி வீடியோ வெளியிட்டு வெறித்தனமான ஹிட் ஆக்கியுள்ளார். அந்த லிஸ்டில் தற்போது பிரபல தெலுங்கு,  தமிழ் நடிகையான பிரகதி தனது மகனுடன் வேட்டி சட்டை அணிந்து செம குத்து டான்ஸ் போட்டுள்ளார். இந்த வயதிலும் இவ்வளவு எனர்ஜியாக ஆடியுள்ளதை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றர். பிரகதி அரண்மனைக் கிளி உள்ளிட்ட தமிழ் சீரியல்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Quarantine tales #vaathicoming #mothersonduo #master

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலாஜி தரணிதரன் இயக்கும் படத்துக்காக உடல் எடையைக் குறைக்கும் விஜய் சேதுபதி!

ஸ்ரீதேவி பயோபிக் உருவாகுமா?... கணவர் போனி கபூர் பதில்!

குட் பேட் அக்லி படத்துக்கும் சிம்புவின் AAA படத்துக்கும் இப்படி ஒரு தொடர்பு இருக்கா?

தக் லைஃப் படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவு நேரமா?... வெளியான தகவல்!

நான் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்… பிரபல கராத்தே மாஸ்டர் ஹுசைனி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments