தெலுங்கு நடிகையான பூனம் கவுர் கல்லூரியில் படிக்கும் போதே படவாய்ப்பு கிடைக்க தனது 20 வயதில் மாயாஜாலம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து சினிமா உலகில் அறிமுகமானார்.பிறகு 2007ஆம் ஆண்டு தமிழில் நெஞ்சிருக்கும் வரை என்ற படத்தில் அறிமுகம் ஆனார்.
அதன்பின்னர் உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, என் வழி தனி வழி, அச்சாரம் என் தமிழ் படங்களில் நடித்தார். அழகு புதுமையான முகபாவனை கொண்டிருந்தாலும் தமிழில் இவரால் பெரிதாக சாதிக்க முடியவில்லை.
இந்நிலையில் இப்போது இவர் தெலுங்கு திரையுலகில் நடக்கும் அத்துமீறல்கள் குறித்து தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அந்தவகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில் “தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருக்கும் அந்த இயக்குனர் அந்த பஞ்சாபி நடிகையைக் கர்பமாக்கி சீரழித்தார். அது சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடத்திய நடிகர் சங்கம் அந்த நடிகைக்கு சிறு உதவி செய்தது.” எனக் கூறியுள்ளார். இந்த பதிவில் அவர் அந்த இயக்குனர் மற்றும் நடிகை ஆகியோரின் பெயரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.