Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாராவது உதவுங்களேன் ப்ளீஸ்.. உதவி கேட்ட நடிகை! – உதவியில்லாமல் பறிபோன உயிர்!

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (11:24 IST)
தமிழ் படங்களில் நடித்த பியா பாஜ்பாய் தனது சகோதரனுக்கான உதவி கேட்டு கிடைக்காத நிலையில் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் கோவா, கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பியா பாஜ்பாய். தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் பியாவின் சகோதரரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் உத்தர பிரதேசத்தில் உள்ள பரூகாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த மருத்துவமனையில் வெண்டிலேட்டர் வசதி கிடைக்காததாக தெரிகிறது. இதனால் தனது சகோதரனுக்கு வெண்டிலேட்டர் அவசரமாக தேவைப்படுவதாகவும் உதவுமாறும் பியா ட்விட்டர் மூலமாக சில மணி நேரங்கள் முன்னதாக உதவி கேட்டிருந்தார். இந்நிலையில் வெண்டிலேட்ட்டர் உதவி கிடைப்பதற்கு முன்னதாகவே அவரது சகோதரர் இறந்து விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அவரே தற்போது ட்விட்டரில் தனது சகோதரன் இறந்து விட்டதாக பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments