Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் பிரபல சன் டிவி சீரியல் நடிகை?

Advertiesment
பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் பிரபல சன் டிவி சீரியல் நடிகை?
, திங்கள், 25 செப்டம்பர் 2023 (18:46 IST)
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-ன் ப்ரோமோ சமீபத்தில் வெளியான நிலையில் அடுத்த மாதம் முதல் நிகழ்ச்சி தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சீசனில் பிக்பாஸில் இரண்டு வீடுகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது.

இந்த சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொள்பவர்கள் என பலரின் பெயர்கள் சொல்லப்படுகின்றன. அதில் முக்கியமானவர்களாக நடிகர் அப்பாஸ், பிருத்விராஜ், கிரண், வைரல் ஆன டிரைவர் ஷர்மிளா உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் பத்திரிக்கையாளர் மற்றும் நகைச்சுவை நடிகர் பயில்வான் ரங்கநாதன் கலந்துகொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் தொடரில் நடித்துவரும் நிவிஷா பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல உள்ளதாகவும், அதற்காக அந்த சீரியலில் இருந்து விலகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிவின் பாலியின் ஏழு கடல் ஏழு மலை படம் தாமதம் ஏன்? வெளியான தகவல்!