Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விருது விழாவிற்கு இப்படியா உடை அணிவது...? நீண்ட நாட்களுக்கு பிறகு எல்லை மீறிய நமீதா!

விருது விழாவிற்கு இப்படியா உடை அணிவது...? நீண்ட நாட்களுக்கு பிறகு எல்லை மீறிய  நமீதா!
, சனி, 24 அக்டோபர் 2020 (11:31 IST)
நயன்தாரா காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான நமீதா கொஞ்ச நாட்களிலேயே ஒட்டுமொத்த இளசுகளையும் மச்சான்ஸ் என்று அழைத்து கவர்ந்தார். தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து அழகிய தமிழ் மகன், பில்லா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றி பெற்றார். கொஞ்சும் தமிழ், அளவற்ற கவர்ச்சி என அத்தனை பேருக்கும் பரீட்சியமான நடிகையான நமீதாவுக்கு நாட்கள் செல்ல செல்ல புது நடிகைகளின் வருகையால் மார்க்கெட் சரிந்தது. இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பினார்.

பின்னர் தனது நீண்டநாள் நண்பரும் காதலருமான வீரேந்திர சௌத்ரியை 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்வில் செட்டில் ஆனார். தற்போது தனது உடல் எடையை குறைத்து கட்டான உடல் தோற்றத்தை பெற கடந்த சில நாட்களாக கடுமையாக முயற்சித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஜீ தெலுங்கு குடும்பம் விருது விழாவில் படு கிளாமர் உடையணிந்து சர்ச்சை கிளப்பியுள்ளார். மீண்டும் பழைய ஃபார்மில் நமீதாவை பார்த்த ரசிகர்கள் மெய்மறந்து ரசிக்க ஆரம்பித்துவிட்டனர்.


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 மெஹா ஹிட் படம் கொடுத்த இயக்குனரையே கழட்டிவிட்டாரே தளபதி! அதிருப்தியில் ரசிகர்கள்!