சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சீதாராமம் புகழ் மிருனாள் தாக்கூர்!

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (08:14 IST)
தர்பார் படத்தின் தோல்வியால் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் சில வருடங்களாக படம் இயக்காமல் இருந்து வருகிறார். இடையில் அவர் அக்‌ஷய் குமார் மற்றும் ஒரு குரங்கை வைத்து ஒரு பிரம்மாண்ட படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த படம் அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை.

இதனால் மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை ஸ்பைடர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த படம் பற்றிய வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்போது சிவகார்த்திகேயன் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து முடித்தவுடன் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிருனாள் தாக்கூர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகிழ் திருமேனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஷ்ரத்தா கபூர்!

டிசம்பர் மாதம் கேரளாவில் தொடங்கும் சூர்யாவின் 47 ஆவது படத்தின் ஷூட்டிங்!

எனக்கெதிராக போர் நடந்தால் போராட வேண்டும்… வருங்கால கணவர் குறித்து ராஷ்மிகா விருப்பம்!

கல்கி & ஸ்பிரிட் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்?... முதல் முறையாக மௌனம் கலைத்த தீபிகா படுகோன்!

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ ரிலீஸ் தேதியில் மாற்றம்?... தெலுங்கு டைட்டில் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments