வருகிறது 7ஜி ரெயின்போ காலணியின் இரண்டாம் பாகம்… லேட்டஸ்ட் அப்டேட்!

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (08:07 IST)
2004 ஆம் 7ஜி ரெயின்போ காலணி தமிழ் சினிமா கண்ட மிகச்சிறந்த காதல் திரைப்படங்களில் ஒன்று. அந்த படத்தில் தனது மிகச்சிறப்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார் சோனியா அகர்வால். இந்த படம் செல்வராகவனின் சினிமா கேரியரில் ஒரு மிக முக்கியமான வெற்றிப்படமாக அமைந்தது. யுவன் இசையில் நா முத்துக்குமாரின் பாடல்கள் எவர்கீர்ன் சார்ட்பஸ்டர் ஹிட்ஸ்களாக அமைந்தன.

இதையடுத்து இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் பாகத்தையும் செல்வராகவனே இயக்குவார் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே அவரின் புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களுக்கும் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதல் பாகத்தில் நடித்த ரவிகிருஷ்ணாவே இரண்டாம் பாகத்திலும் நடிப்பார் என சொல்லப்படுகிறது. கதாநாயகியாக முன்னணி நடிகை ஒருவர் நடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகம் வெளியாகி கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இரண்டாம் பாகம் அதன் தொடர்ச்சியாக இருக்குமா இல்லை புதிய கதைககளமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments