Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல தமிழ் நடிகைக்கு 3வது திருமணம்.. வைரல் புகைப்படம்..!

பிரபல தமிழ் நடிகைக்கு 3வது திருமணம்.. வைரல் புகைப்படம்..!

Siva

, ஞாயிறு, 26 மே 2024 (08:31 IST)
பிரபல தமிழ் நடிகை மூன்றாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவருடைய திருமண புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 2003ம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மீரா வாசுதேவன். அதன் பின்னர் அவர் ஜெர்ரி, கத்தி கப்பல், ஆட்டநாயகன், குமரிப்பெண்ணின் உள்ளத்திலே, அடங்க மறு, போன்ற தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று அவர் விபின்  என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் அவரது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை மீரா வாசுதேவன் கடந்த 2005 ஆம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மகன் விஷால் அகர்வால் என்பவரை திருமணம் செய்து அவரை சில ஆண்டுகளில் விவாகரத்து செய்தார்.

அதன்பின் அவர் மலையாள நடிகர் ஜான் கொகைன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரையும் ஒரு சில ஆண்டுகளில் விவாகரத்து செய்தார். இந்த நிலையில் இன்று அவர் விபின் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!