Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதெல்லாம் பெண்களுக்கு மட்டும்தான் நடக்கிறது… மறுமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த மீனா!

Advertiesment
இதெல்லாம் பெண்களுக்கு மட்டும்தான் நடக்கிறது… மறுமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த மீனா!

vinoth

, வெள்ளி, 5 ஜனவரி 2024 (09:25 IST)
1980 களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி  90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா என்பதும் அவரது படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட மீனாவுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.  சமீபத்தில் வித்யாசாகர் உடல்நலப் பிரச்சனை காரணமாக காலமானார்.

மீனாவின் மகள் நைனிகா விஜய் நடித்த தெறி உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மீனா சினிமாவில் நடிக்க தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அதைக் கொண்டாடும் விதமாக மீனா 40 என்ற நிகழ்ச்சியை அவரின் திரையுலக நண்பர்கள் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் மீனா, ஒரு பிரபல நடிகரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் அதுபற்றி பதிலளித்துள்ளார். அதில் “ஒரு ஹீரோ தனியாக இருந்தால் இதுபோன்ற வதந்திகள் பரவுவதில்லை. ஆனால் ஒரு ஹீரோயின் தனியாக இருந்தால் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. எனக்கு மறுமணம் குறித்த எந்த யோசனையும் இல்லை. இப்போது என் மகள் மீதுதான் என் முழு கவனமும் உள்ளது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜனவரி 31 ஆம் தேதி ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் திரையிடப்படும் விடுதலை திரைப்படம்!