Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உன் அளவுக்கு நான் விரசமா நடிக்கலையே! கஸ்தூரியை விளாசிய லதா!

Advertiesment
உன் அளவுக்கு நான் விரசமா நடிக்கலையே! கஸ்தூரியை விளாசிய லதா!
, வியாழன், 11 ஏப்ரல் 2019 (08:18 IST)
நடிகை கஸ்தூரி, சென்னை அணியின் பேட்டிங் குறித்து எம்ஜிஆர்-லதாவுடன் சம்பந்தப்படுத்தி பதிவு செய்த ஒரு டுவீட் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எம்ஜிஆர் ரசிகர்கள் கஸ்தூரிக்கு தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்த நிலையில் தற்போது நடிகை லதாவும் தனது பங்கிற்கு ஒரு காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது:
 
எம்.ஜிஆரையும், என்னையும்  தவறாக சித்தரித்து கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரிக்கு முதலில் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.
 
நான் 50 வருஷமா நடிச்சிக்கிட்டிருக்கேன். இப்போவரைக்கும் எனக்குன்னு ஒரு மரியாதையை தக்க வைச்சுக்கிட்டிருக்கேன். ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரை. தெய்வமா மதிக்கிற கோடானுகோடி ரசிகர்கள் தமிழ்நாட்டுல இருக்காங்க. அவங்களையெல்லாம் ஒட்டு மொத்தமா மன வருத்தப்படுற மாதிரி இப்படியெல்லாம் எழுதலாமா..?
 
கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கலையே.. அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டுச்சுன்னா அவங்க நடிச்ச படத்துல இருந்தே சொல்லியிருக்கலாமே..? எதுக்கு நானும், ‘மக்கள் திலகமும்’ நடிச்ச படத்தைச் சொல்லணும்..
 
webdunia
அவங்கதான் எதுக்கெடுத்தாலும் பெண்ணியம்.. அது… இதுன்னு கருத்துச் சொல்லிட்டிருக்காங்களே..  இதெல்லாம் பெண்ணியம் பேசுறவங்க பேச்சா.. ஒரு பொண்ணே, இன்னொரு பொண்ணை பொதுவெளில அவமானப்படு்த்துற மாதிரி பேசலாமா..? கஸ்தூரிக்கு பப்ளிசிட்டி வேணும்ன்னா வேற எதையாவது செய்யலாம். இது அந்தப் பொண்ணுக்குத் தேவையில்லாத வேலை. இதுவொரு சீப்பான பப்ளிசிட்டி..
 
இதற்கு நடிகர் சங்கத்தில் இருந்து கண்டன கடிதம் அனுப்பி உள்ளதாக என்னிடம் சொன்னார்கள் அவர்களுக்கு மிக்க நன்றி. அதுமட்டும் இல்லாமல் அனைத்து எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களிலும் இருந்து கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். 
 
நடிகை லதாவின் இந்த அறிக்கை தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் கணவருக்கு நான் கொடுத்த மகத்தான பரிசு! வாழ்நாளில் மறக்கவே மாட்டார்!