நாட்டாமை படத்தில் குஷ்பு நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகை லட்சுமிதானாம்.
தமிழ் சினிமாவில் வசூல் சாதனை படைத்த திரைப்படங்களில் ஒன்று நாட்டாமை. சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு ஆகிய இருவரும் நடித்தனர். இதில் மீனாதான் கதாநாயகி என்றாலும் குஷ்பு ஒரு குணச்சித்திர நடிகை போலதான் நடித்திருந்தார்.
இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் முன்னாள் நடிகை லட்சுமிதானாம். ஆனால் கதாபாத்திரத்தை விவரித்த விதத்தால் கவரப்பட்ட குஷ்பு உடனடியாக நடிக்க சம்மதித்தாராம்.