Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

14 வயசுல தக்காளி பழம் மாதிரி தள தளன்னு இருக்கும் குஷ்பு - வைரல் புகைப்படம் இதோ!

14 வயசுல தக்காளி பழம் மாதிரி தள தளன்னு இருக்கும் குஷ்பு - வைரல் புகைப்படம் இதோ!
, புதன், 22 ஏப்ரல் 2020 (09:30 IST)
தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து ரசிகர்களின் பேஃவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் கடந்த 2001ம் ஆண்டு சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார் இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

திருமண வாழ்க்கைக்கு பிறகும் வெள்ளித்திரைகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக்கொண்டே தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். எப்போதும் சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் குஷ்பு தன் குடும்பத்தை பற்றியோ, தன்னை சார்ந்தவர் யாரையேனும் இணையவாசிகள் கிண்டல் செய்தவர் அவர்களை பிரித்து மேய்ந்து விடுவார். தன் பப்ளி அழகால் ரசிகர்களை கவர்ந்த குஷ்புவிற்கு இப்போதும் இளம் ஹீரோயிகளை போன்று ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தான் சிறுவயதாக இருந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு  ''உங்களுடன் இதனை ஷேர் செய்து கொள்ள விரும்புகிறேன். பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட போட்டோ இது. அப்பொழுது எனக்கு 14 வயதிருக்கும் என்று நினைக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஹாலிவுட் ஹீரோயின் போன்று கொள்ளை அழகில் இருக்கும் குஷ்புவை  நடன இயக்குநர் பிருந்தா உள்ளிட்டோர் ரசித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். குஷ்பு தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த நடிகரை எனக்கு ரொம்ப பிடிக்கும்... என் அப்பா, அம்மாவும் விரும்புவாங்க!