அல்-ஜசீரா தொலைக்காட்சி நடத்திய விவாதத்தில் கலந்துக் கொண்டு பேசிய பாஜக எம்.பி. தருண் விஜய், தென்னிந்தியர்களை குறிப்பிட்டு நாங்கள் கருப்பின மக்களோடு வாழ்கிறோம் என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இவரது கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் தருண் விஜய் மன்னிப்பு கோரினார்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தருண் விஜய் கூறியதில் என்ன தப்பு?. நமது நிறம் கருப்பு தானே?, நாம் என்ன வெள்ளைக்காரர்களா என்ன? என்று கேள்வி எழுப்பினார்.