Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிவுட்டில் தொடர் தோல்வி... ஹாலிவுட் செல்லும் கங்கனா!

Webdunia
திங்கள், 12 மே 2025 (09:00 IST)
பாலிவுட் சினிமாவின் சர்ச்சை நாயகியான கங்கனா ரனாவத்தின் சமீபத்தைய படங்கள் எதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இதனால் சமீபத்தைய ஆண்டுகளில் பாலிவுட்டைத் தவிர்த்து கங்கனா தென்னிந்திய சினிமாவிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார். தலைவி படம் மூலம் தமிழில் ரி எண்ட்ரி கொடுத்த அவர், சந்திரமுகி 2 படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே பெரியளவில் வெற்றியைப் பெறவில்லை.

அதன் பின்னர் அவரே இயக்கி நடித்து, தயாரித்த ‘எமர்ஜென்ஸி’ படம் ரிலீஸாகி அதுவும் தோல்விப் படமாக அமைந்தது. அவரது சினிமா வாழ்க்கை தேய்முகமாக இருந்தாலும் அரசியலில் கால்பதித்து நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் ஹாலிவுட் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். அனுராக் ருத்ரா இயக்கவுள்ள ‘blessed be the evil” என்ற ஹாரர் படத்தில் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கங்கனா.  இதில் ஹாலிவுட் நடிகர்களும் நடிக்கின்றனர். விரைவில் படப்பிடிப்பு நியுயார்க் நகரில் தொடங்கவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

“ரஜினி, கமல் சேர்ந்து நடிக்க ஒரு கதை ரெடி… ஆனால்” –லோகேஷ் பகிர்ந்த தகவல்!

தீபாவளி ரேஸில் இணைந்த ப்ரதீப் ரங்கநாதனனின் ‘DUDE’ திரைப்படம்!

பொது நிகழ்ச்சி மேடையில் மயங்கி விழுந்த விஷால்… இப்போது எப்படி இருக்கிறார்?

10 படமெல்லாம் இல்லை… எத்தனை படம் வேண்டுமானாலும் இயக்குவேன் – முடிவை மாற்றிக் கொண்ட லோகேஷ்!

சினிமா நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார்! - பிரபலங்கள் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments