Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல ஆண்டுகளுக்கு பிறகு வெளி உலகத்துக்கு வந்த கனகா… பிரபல நடிகையோடு வெளியான போட்டோ!

பல ஆண்டுகளுக்கு பிறகு வெளி உலகத்துக்கு வந்த கனகா… பிரபல நடிகையோடு வெளியான போட்டோ!
, செவ்வாய், 28 நவம்பர் 2023 (06:43 IST)
கனகா, பழைய கதாநாயகி தேவிகாவின் ஒரே மகள். கரகாட்டகாரன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜயகாந்த் மற்றும் பிரபு ஆகியோரோடு இணைந்து பல படங்களில் நடித்தார். 90 களில் முன்னணி நாயகியாக வலம் வந்த அவருக்கு ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைந்தன. ‘முத்துகுமார்’ என்ற என்ஜினீயரை அவர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், முத்துகுமார் யார் என்றே எனக்கு தெரியாது என்று கனகா கூறினார்.

தேவிகா  கதாநாயகியாக   நடித்து சம்பாதித்த சொத்துகளுக்கு எல்லாம் ஒரே வாரிசு, கனகாதான். தனது அம்மாவின்  பழைய பங்களாவில்தான் அவர் வசித்து வருகிறார். தன்னிடமுள்ள சொத்துக்களை யாராவது பறித்து விடுவார்களோ என்ற பயம் அவரது மனதில் பயத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், அதனால்தான் அவர் யாருடனும் பேசிப்பழகுவது இல்லையாம்.

அவர், கடந்த சில வருடங்களாக வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தனிமையில் வசித்து வருகிறாராம். பெரும்பாலும் அவர் வெளியே வருவதில்லை. இயக்குனர் கங்கை அமரன் அவரிடம் பேச முயன்ற போது கூட தன்னை யாரென்று தெரியாது என சொல்லிவிட்டதாக ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்போது பிரபல நடிகையும் தயாரிப்பாளருமான குட்டி பத்மினி கனகாவின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து, அவரோடு புகைப்படம் எடுத்து அதை வெளியில் பகிர்ந்துள்ளார். அதில் காணப்படும் கனகா, ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போய் காணப்படுகிறார். பலரும் இந்த புகைப்படத்தைப் பார்த்து ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''புடிச்சத பண்ணுனா லட்சம் பேரும் சூப்பர் ஸ்டாராகலாம்''- 'அன்னப்பூரணி' பட டிரெயிலர்