தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல். இந்நிலையில் கடந்த லாக்டவுனின் போது அவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அதையடுத்து கர்ப்பமான அவர், அதை ரசிகர்களுக்கு அறிவித்து, கர்ப்பகால புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். அதையடுத்து சமீபத்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	வட இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் அதிகமாக தென்னிந்திய சினிமாக்களில் நடித்ததன் மூலமாகவே பிரபலம் அடைந்தார். சமீபத்தில் இதுபற்றி பேசிய அவர் “பலரும் பாலிவுட் படங்களில் நடிப்பதன் மூலம் நாடு முழுவதும் பிரபலம் கிடைக்கும் என நினைத்து அதில் நடிக்கின்றனர். ஆனால் தென்னிந்திய சினிமாவில் இருக்கும் அறம், ஒழுக்கம் போன்றவை பாலிவுட்டில் குறைவுதான் எனக் கருதுகிறேன். அதனால்தான் நான் தென்னிந்திய மொழி சினிமாக்களில் நடித்தேன்.” எனக் கூறியுள்ளார்.
 
									
										
			        							
								
																	இப்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் தங்கையும் நடிகையுமான நிஷா அகர்வால் உடன் இணைந்து எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.