Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி காலமானார்

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (16:22 IST)
தனது கவர்ச்சி நடனத்தால் அரை நூற்றாண்டு ரசிகர்களை மகிழ்வித்த நடிகை ஜோதிலட்சுமி நேற்றிரவு காலமானார்.


 

 
ஜோதிலட்சுமி 1963 -இல் வெளிவந்த பெரிய இடத்து பெண் படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். அழகும் திறமையும் இருந்த அவருக்கு அதிகமும் கிடைத்தது அந்த கால கிளப் டான்ஸ் எனப்படும் கவர்ச்சி நடனங்கள் மட்டுமே. ஜோதிலட்சுமியின் கவர்ச்சி நடனத்துக்காகவே அன்று பலரும் திரையரங்குக்கு வந்தனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று நான்கு மொழிகளில் ஜோதிலட்சுமி கொடிகட்டிப் பறந்தார். 
 
அவரது சகோதரி ஜெயமாலினியின் வருகை ஜோதிலட்சுமியின் புகழை மங்கச் செய்தது. ஆனாலும், வயதான நிலையிலும் அவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். சினிமாவில் அவர் சம்பாதித்த இமேஜுக்கு முற்றிலும் வேறு திசையில் இருந்தது அவரது தொலைக்காட்சி நடிப்பு. 
 
ரத்த புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த அவர் நேற்றிரவு காலமானார். கடைசிவரை அவர் தனது நோய் குறித்து நெருக்கமானவர்கள் தவிர வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை.
 
திரையுலக பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எந்திரன் படக் கதைத் திருட்டு வழக்கு… இயக்குனர் ஷங்கரின் சொத்துகள் முடக்கம்!

திவ்யபாரதியை நான் டேட்டிங் செய்கிறேனா?... ஜி வி பிரகாஷ் அளித்த பதில்!

ஏ ஆர் ரஹ்மான் முன்னாள் மனைவி சாய்ரா பானுவிற்கு மும்பையில் அறுவை சிகிச்சை!

தொடங்கியது பிரசாந்த் நீல்& ஜூனியர் NTR இணையும் படத்தின் ஷூட்டிங்!

ரி ரிலீஸாகவுள்ள சேரனின் ‘ஆட்டோகிராஃப்’… AI மூலமாக உருவாக்கப்பட்ட புது டிரைலர்!

அடுத்த கட்டுரையில்