சுகேஷ் நம்பவைத்து வாழ்க்கையை சீரழித்தார்! – நடிகை ஜாக்குலின் பரபரப்பு குற்றச்சாட்டு!

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (15:13 IST)
மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் மீது நடிகை ஜாக்குலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டு உள்பட 15 மோசடி வழக்குகளின் கீழ் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இவர்குறித்த விசாரணையை தொடங்கியபோதுதான் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. இதுபோன்று பல கோடி பண மோசடிகளை செய்துள்ள சுகேஷ் தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடியை மோசடி செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பல நடிகைகள், மாடல்களுடன் தொடர்பில் இருந்தவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் ஜாக்குலினுக்கு வாங்கி தந்த பூனை மட்டுமே பல லட்சம் என தெரிய வந்துள்ளது.

ALSO READ: பிக்பாஸ் சீசன் 6: விக்ரமனுக்கு வாக்கு கேட்ட திருமாவளவன் - விடுதலை சிறுத்தைகள் கூறுவது என்ன?

மாடலிங், நடிகைகள் மீது ஆர்வம் கொண்ட சுகேஷ் தனது உதவியாளர் பிங்கி இரானி வழியாக அவர்களை தொடர்பு கொண்டு மயக்கி உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது. இவரிடம் இந்தி திரைப்பட நடிகை நோரா பதேகி, அருஷா பட்டில், சோபியா சிங் உள்ளிட்டோரும் பழக்கமாக இருந்த நிலையில் இந்த வழக்கில் சாட்சிகளாக மாறியுள்ளனர்.

இந்நிலையில் பாட்டியாலா நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் வாக்குமூலம் அளித்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், சுகேஷ் இப்படிபட்ட மோசடி பேர்வழி என்று தனக்கு தெரியாது என்றும், பிங்கி இரானிக்கு தெரிந்திருந்தாலும் அவரும் அதுகுறித்து சொல்லவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் சுகேஷ் தனது உணர்வுகளுடன் விளையாடி, தனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார் என்றும் கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments