Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவரைப் பிரிகிறாரா ஹன்சிகா மோத்வானி?…ரசிகர்கள் அதிர்ச்சி!

vinoth
திங்கள், 21 ஜூலை 2025 (12:16 IST)
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி.  குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலதிபர் சோஹைல் கட்டாரி என்பவரை  அவர் திருமணம் செய்துகொண்டார்.

சோஹைல் கட்டாரி ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பதும், அவரின் முன்னாள் மனைவி ஹன்சிகாவின் நெருங்கிய தோழி என்பது சர்ச்சிக்கப்பட்டது. திருமணத்துக்குப் பின்னரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஹன்சிகாவின் திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகளில் தற்போது அவர் தன்னுடைய கணவர் சோஹலைப் பிரிய முடிவெடுத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. கணவர் வீட்டில் இருந்து ஹன்சிகா வெளியேறி தனியாக வாழ்ந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. சமீபகாலமாக சினிமா புகழாளர்களின் திருமண வாழ்க்கை இது போல குறுகிய காலத்தில் விவாகரத்தில் முடிவது வாடிக்கையாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீரமல்லு’ படத்தின் ரிலீஸுக்கு மீண்டும் சிக்கலா?

சென்னையில் நடக்கவிருந்த அனிருத் இசைக் கச்சேரி ஒத்திவைப்பு… பின்னணி என்ன?

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

அடுத்த கட்டுரையில்