Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன் மீதான குடும்ப வன்முறை வழக்கு.. தள்ளுபடி செய்ய மனுத்தாக்கல் செய்த ஹன்சிகா!

vinoth
சனி, 5 ஏப்ரல் 2025 (11:47 IST)
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி.  குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அதற்கு  அவர் நடிப்புக்குத் தீனி போடும் கதாபாத்திரங்களை தேர்வு செய்யாதது. இதையடுத்து அவர் சமீபத்தில் அவர் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்த் மோத்வானியின் முன்னாள் மனைவியும் தொலைக்காட்சி நடிகையுமான முஸ்கன் நான்சி ஹன்சிகா மற்றும் அவரின் தாயார் மேல் குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதில் “ஹன்சிகா மற்றும் எனது மாமியார், என் கணவரிடம் அழுத்தம் கொடுத்து எங்கள் மணவாழ்க்கையில் குறுக்கிட்டனர். இதனால் பிரசாந்த், என் மீது வன்முறையை செலுத்தினர். என்னைக் கொடுமைப்படுத்தி பணம் மற்றும் சொத்துகளை என் பிறந்த வீட்டில் இருந்து கொண்டுவரும்படி வற்புறுத்தினர்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கு அடிப்படை ஆதாரமற்றது என்றும் உள்நோக்கம் என்றும் ஹன்சிகா மனுத்தாக்கல் செய்துள்ளார். அதனால் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும் என ஹன்சிகா கோரிக்கை வைத்துள்ளார். இதையடுத்து வழக்கு விசாரணை ஜூலை 3 ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னது ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் ரி ரிலீஸாகிறதா?

மொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்படும் டிக்கெட்கள்.. அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

இந்த வயசில் அந்த ஜானரில் ஒரு படமா?.. சூர்யா எடுத்த அதிரடி முடிவு!

விஜய்யின் ‘சச்சின்’ படத்தின் ரி ரிலீஸோடு மோதும் ரஜினியின் சூப்பர்ஹிட் படம்!

நல்ல விமர்சனங்கள் வந்தும் ஏன் விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ பெரிய வசூல் செய்யவில்லை.. தலைவன் வரலாறு அப்படி!

அடுத்த கட்டுரையில்
Show comments