எனக்கு ஆதரவாக இயக்குனரும் ஹீரோவும் பேசவில்லை: நடிகை கெளரி கிஷன் ஆதங்கம்..!

Siva
சனி, 8 நவம்பர் 2025 (12:31 IST)
சமீபத்தில் ஒரு பட விழாவில் தன்னை 'உருவ கேலி' செய்த யூடியூபர் குறித்து நடிகை கௌரி கிஷன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். 
 
'அதெர்ஸ்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், யூடியூபர் ஒருவர் தனது உடல் எடை குறித்தும், 'நாயகன் உயரமாகவும், நாயகி குள்ளமாகவும் இருக்கிறார்களே, கதாபாத்திர தேர்வு தவறா?' என்றும் மோசமான கேள்விகளை எழுப்பினார் என கௌரி தெரிவித்துள்ளார்.
 
"எனது உடல் எடைக்கும் படத்திற்கும் என்ன சம்பந்தம்?" என்று கேள்வி எழுப்பிய கௌரி, அந்த யூடியூபர் 10 முதல் 12 நிமிடங்கள் தனது கேள்விகள் சரியென வாதிட்டதாகவும் குற்றம் சாட்டினார். அப்போது இயக்குநர் மற்றும் ஹீரோ உட்பட யாருமே தனக்கு ஆதரவாக பேசவில்லை என்றும் அவர் வேதனையை பகிர்ந்துகொண்டார்.
 
"எனது உடல் என்னுடைய விருப்பம்," என்று வலியுறுத்திய அவர், திரைத்துறையில் பெண்ணாக நிலைத்து நிற்பது மிகவும் கடினம் என்றும், உருவ கேலியால் மனநல பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறினார். கௌரி கிஷனுக்கு ஆதரவாக பல திரைத்துறை பிரபலங்கள் தற்போது குரல் கொடுத்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொஞ்சம் விட்டுருந்தா கவின காலிபண்ணியிருப்பாரு! காப்பாற்றிய வெற்றிமாறன்

தனுஷை தாண்டி ரசிக்கப்பட்ட அபிநய்! கடைசியில் கேட்பாரற்று கிடக்கும் அவலம்

கடவுளின் விதியை மக்கள் மாற்றி எழுதுகின்றனர்! பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரவீன் பதிவு..!

கிளாமர் லுக்கில் சுண்டியிழுக்கும் ஜான்வி கபூர்… கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஹோம்லி லுக்கில் அழகிய போஸில் அசத்தும் துஷாரா விஜயன்!

அடுத்த கட்டுரையில்
Show comments