Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி காலமானார்!

பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி காலமானார்!
, திங்கள், 28 ஜூன் 2021 (11:25 IST)
பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி காலமானார்!
பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி அவர்கள் காலமானதை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 
 
காரைக்குடியைச் சேர்ந்த பழம்பெரும் நடிகை ஜமுனா ராஜேஸ்வரி அவர்கள் ஜெமினியின் ’சந்திரலேகா’ என்ற திரைப்படத்தில் குரூப் டான்ஸராக ஆடியவர். அதனால் அவருக்கு ஜெமினி ராஜேஸ்வரி என்ற பட்டம் கிடைத்தது 
 
ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்த இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நிறம் மாறாத பூக்கள், பிரியா, நீரு பூத்த நெருப்பு, இது எங்கள் நாடு, 16 வயதினிலே உள்பட பல திரைப்படங்கள் நடித்துள்ளார். 16 வயதினிலே திரைப்படத்தில் காந்திமதி உடன் சண்டை போடும் பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது
 
சமீபத்தில் கூட அவர் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் ஜெமினி ராஜேஸ்வரியின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேர்மறை விமர்சனங்களைக் குவிக்கும் மேதகு!