விபத்தை ஏற்படுத்திவிட்டு விபத்தில் அடிபட்டவர் மீதும், அதிகாரிகள் மீதும் நடிகை குறை கூறியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகை ரஷ்மி கவுதம். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். அதுபோக தமிலிலும் ஹிந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ஷூட்டிங்க் முடிந்து வீடு திரும்பிய போது சாலையை கடக்க முயன்ற நபர் ஒருவர் மீது இவரின் கார் வேகமாக மோதியது. அடிப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்விபத்து குறித்து போலீஸார் ரஷ்மி கவுதமின் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து பேசிய நடிகை, நான் வண்டி ஓட்டி வந்த ஏரியாவில் ஸ்ட்ரீட் லைட்டே இல்லை. அதுபோக அந்த நபர் மேம்பாலத்தை பயன்படுத்தை விட்டு நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். இதில் நெடுஞ்சாலை துறை மீது குறை சொல்வதா அல்லது அடிபட்ட நபர் மீது குறை சொல்வதா, என் மீது எந்த தவறும் இல்லை என அவர் கூறியிருக்கிறார்.