தமிழ் உள்பட பல மொழி திரைப்படங்களில் நடித்த நடிகை ஒருவர் துறவறம் கொண்டுள்ளதாக கும்பமேளா திருவிழாவில் அறிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி தமிழில் நண்பர்கள் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தை விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை அடுத்து அவர் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருந்தார். கடந்த 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்வாறு நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், 52 வயதாகும் நடிகை மம்தா குல்கர்னி கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட நிலையில், தற்போது மீண்டும் அவர் கும்பமேளாவில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில், அவர் கும்பமேளா பகுதியில் தான் துறவறம் கொண்ட தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
அவரது கோரிக்கைகளை ஏற்று, அவருக்கு முறையான சடங்குகள் செய்யப்பட்டதாகவும், இதையடுத்து அவருக்கு ஷியாமாய் மம்தாணந்த் கிரி என்ற பெயரும் வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, அவர் திரிவேணி சங்கமத்தில் நீராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.