தமிழ் சினிமாவின் வித்யாசமான கதைகளை தேர்தெடுத்து நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை அஞ்சலியின் திரைப்பயணத்தில் கற்றது தமிழ், அங்காடி தெரு, கலகலப்பு, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்கள் மைல் கல்லாக அமைந்தது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இதற்க்கிடையில் எங்கேயும் எப்போதும் படத்தில் தன்னுடன் நடித்த நடிகர் ஜெய் காதலித்து இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருவதாக கிசு கிசுக்கள் எழுந்தது. பின்னர் சில காலம் படங்களில் நடக்காமல் இருந்து வந்த அஞ்சலி மீண்டும் பேரன்பு, லிசா ,நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
ஆனால் தற்போது சரியான படவாய்ப்புகள் இல்லாமல் விட்ட இடத்தை தேடி பிடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு ஜெய்யுடனான அவரது காதல் முறிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அஞ்சலிக்கு ஜெய் மீது இருந்த நம்பிக்கை குறைந்தது தான் இந்த காதல் முறிவிற்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது அஞ்சலி மற்றும் ஜெய் ஆகிய இருவரையும் வைத்து பலூன் என்ற படத்தை எடுத்த தயாரிப்பாளர் திலீப் சுப்ராயன் அஞ்சலியை கெடுத்ததே ஜெய் தான் என்று கூறியுள்ளார். அதாவது, படப்பிடிப்பு வந்தால் ஒழுங்காக நடித்து கொடுக்காமல் வெளியில் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றுவார்கள். ஜெய் இயக்குனர்களிடம் அஞ்சலியை பெயர் சொல்லி கூப்பிட்டால் கண்டிப்பார். மேடம் என கூற சொல்லி டார்ச்சர் செய்வார் என கூறியுள்ளார். எப்படியோ ஜெய்யை பிரிந்த அஞ்சலி இனிமேல் ஆவது தொடர் ஹிட் கொடுப்பாரா? பார்க்கலாம்...