Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“இன்னும் என்னை குழந்தையாகவே பார்க்கிறார்கள்… எனக்கு 18 வயது ஆகுது” – அனிகா பதில்!

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2023 (09:35 IST)
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்த்திரமாக ஐந்து சுந்தரிகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பேபி அனிகா. அதன் பின்னர்  அஜித் நடித்த 'என்னை அறிந்தால்" படத்தில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மீண்டும் விஸ்வாசம் படத்திலும் அஜித்துக்கு மகளாக நடித்து கவனத்தை ஈர்த்தார். மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். தற்போது கதாநாயகியாக ப்ரமோஷன் ஆகியுள்ள அனிகா நடித்துள்ள ஓ மை டார்லிங் என்ற திரைப்படம் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த படத்தில் நெருக்கமான காதல் காட்சிகளும், முத்தக் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. பதின் பருவ காதலர்கள் பற்றிய படம் என்பதால் இது சாதாரணமானதுதான் என்றாலும், பலரும் இதுபற்றி அனிகா மீது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர். இதுபற்றி இப்போது விளக்கம் அளித்துள்ள அனிகா “நான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்ததால் பலரும் என்னை குழந்தையாகவே நினைக்கிறார்கள். ஆனால் எனக்கு இப்போது 18 வயது ஆகிறது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரம் & மடோன் அஸ்வின் இணையும் படம் தொடங்குவதில் தாமதம்… பின்னணி என்ன?

குட்னைட் தயாரிப்பாளர்களின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் & அசோக் செல்வன்!

சின்ன பட்ஜெட்டில் எடுத்து ஆஸ்கரை தட்டிய பூனை! டிஸ்னியை ஆட்டம் காண வைத்த Flow!

டீசரில் அஜித் அணிந்திருந்த அந்த ‘ஜிகினா’ சட்டையின் விலை இவ்வளவா..?!

100 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல்… சொல்லி அடித்த ‘டிராகன்’!

அடுத்த கட்டுரையில்
Show comments