Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 நாள் மகனை பிரிய முடியாது! பிக்பாஸ் 3 நிகழ்ச்சியை மறுத்த நடிகை

Webdunia
புதன், 22 மே 2019 (07:36 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது உலகம் முழுவதும் 100 நாட்களில் புகழ் பெற ஒரு பெரிய தளம், அதில் பங்குகொள்ள வாய்ப்பு கிடைக்காதா? என பல நட்சத்திரங்கள் ஏங்கி கொண்டிருக்கையில் நடிகை ஒருவர் தனக்கு வந்த பிக்பாஸ் வாய்ப்பை மறுத்துள்ளார். 
 
பாலாவின் 'தாரை தப்பட்டை உள்ளிட்ட ஒருசில படங்களிலும் ‘ஜோடி நம்பர் ஒன்’, ‘கிச்சன் சூப்பர்ஸ்டார் போன்ற டிவி நிகழ்ச்சிகளிலும் தோன்றியவர் நடிகை ஆனந்தி. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது.
 
இந்த நிலையில் பிக்பாஸ் 3' நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆனந்திக்கு வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் தனது மகனை 100 நாள் தன்னால் பிரிந்திருக்க முடியாது என்று கூறி அந்த வாய்ப்பை நடிகை ஆனந்தி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஒருசில நடிகர், நடிகைகள் மறுத்துள்ள நிலையில் தற்போது ஆனந்தியும் மறுத்துள்ளார்.
 
ஜாங்கிரி மதுமிதா, எம்.எஸ்.பாஸ்கர், சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டோர்கள் பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படினும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 15 பேர் பட்டியல் உண்மையில் நிகழ்ச்சி தொடங்கும் அன்றுதான் தெரிய வரும். அதுவரை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் அனைத்தும் ஊகத்தின் அடிப்படையிலானது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபாஸுக்கு வில்லன் ஆகிறாரா விஜய் சேதுபதி?.. எந்த படத்தில் தெரியுமா?

நடிகை எமி ஜாக்சனுக்கு 2வது ஆண் குழந்தை.. பெயர் என்ன தெரியுமா?

சலார் 2 என்ன ஆச்சு?... நடிகர் பிரித்விராஜ் கொடுத்த அப்டேட்!

மூக்குத்தி அம்மன் ஷூட்டிங்கில் நயன்தாராவுடன் சுந்தர் சி மோதலா?.. நின்ற படப்பிடிப்பு!

கார்த்தி 29 படத்தின் கதாநாயகி இவரா?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments