Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 9 April 2025
webdunia

சரவணன் மீனாட்சியில் நான் நடித்திருக்கவே கூடாது : அவமானங்களை சந்தித்த ரச்சிதா

Advertiesment
Saravanan Meenakshi
, திங்கள், 8 அக்டோபர் 2018 (16:45 IST)
'சரவணன் மீனாட்சி' 2வது மற்றும் 3வது சீசனில் மீனாட்சி வேடத்தில் நடித்தவர் ரச்சிதா.  அந்த தொடர்களில் தினேஷ், இர்பான், கவின் என மூன்று பேர்  அடுத்தடுத்து ஹீரோவாக நடித்தனர்.

 
இதனால் மீனாட்சியாக நடித்த ரச்சிதாவை சமூக வலைதளங்களில் தவறாக பேச ஆரம்பித்தனர். ஒரு சீரியலில் பல ஹீரோக்களுடன் நடிப்பதா என்ற ரீதியில் ரச்சிதாவை விமர்சித்தார்கள். இதனால் மிகவும் நொந்து போனார் ரச்சிதா.
 
ஒருவழியாக 'சரவணன் மீனாட்சி' தொடரின் 3 வது சீசனும் முடிந்து சில மாதங்களை கடந்துவிட்டது. இந்நிலையில் தனக்கு நேர்ந்த அவமானங்கள் குறித்து வாரஇதழ் ஒன்றுக்கு அண்மையில் ரச்சிதா பேட்டி அளித்தார். 
webdunia

 
அப்போது அவர் கூறுகையில், "சரவணன் மீனாட்சி 3-வது சீஸனில் நடிக்க ஒப்புக்கொண்டது, நான் எடுத்த தவறான முடிவு. அந்த சீஸனின் ஷூட்டிங் தொடங்கிய முதல் நாளிலிருந்தே பிரச்னைகளை எதிர்கொண்டேன். 
 
ஷூட்டிங் ஸ்பாட் நல்ல சூழலாக இல்லை. நிறைய அவமானங்கள். எனக்கு நிகழ்ந்த அந்த அவமானங்களைத் தட்டிக் கேட்க வேண்டிய இடத்தில் இருந்தவர்கள் கேட்காமல் நழுவினார்கள். மொத்தத்தில் இந்த சீஸன் என்னை ரொம்பவே காயப்படுத்திட்டுப் போயிடுச்சு!'' என்றார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்ரீதேவியின் ஆவணப்படத்தில் நடிக்கும் பிரபல நடிகை